ராகுல் காந்தியின் செயலுக்கு தமது அதிருப்தியை வௌியிட்டுள்ள சபாநாயகர்!!

Saturday, 21 July 2018 - 19:13

%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%21%21
இந்திய நாடாளுமன்றத்தில், பிரதமர் நரேந்திர மோடி இருக்கையில் அமர்ந்திருந்தபோது, ராகுல் காந்தி அவரை அணைத்த செயல் தொடர்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தமது அதிர்ப்தியை வெளியிட்டுள்ளார்.

மோடி அரசாங்கம் மீது, நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் உரையாற்றிய, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, மோடியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இறுதியில் தன்னைச் சிறுவன் என பிரதமர் மோடி நினைத்தாலும், தாம் அவரை வெறுக்கவில்லை என கூறி, மோடியின் இருக்கைக்குச் சென்று அவரைக் அணைத்தார்.

பிரதமர் மோடியும் ராகுல் காந்தியை அழைத்துக் கைகொடுத்தார்.

இந்த காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டாலும், பாரதீய ஜனதா கட்சியினரும், சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ராகுல் காந்தியின் செயல்பாட்டை தாம் விரும்பவில்லை எனவும் அவையில் அமர்ந்திருப்பது நாட்டின் பிரதமர், அவருக்கென மரியாதை உண்டு எனவும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips