Hirunews Logo
%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Friday, 10 August 2018 - 14:03
சுதந்திர தின விழாவிற்கு எச்சரிக்கை
650

Views
இந்திய சுதந்திர தின விழாவிற்கு தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து, நாடு முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய உள்துரை அமைச்சு தெரிவித்துள்ளது.
 
எதிர்வரும் 15ஆம் திகதி இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அன்றைய தினம், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாடப்படுகின்றன.
 
அத்துடன், அனைத்து மாநில தலைநகரங்களில் சுதந்திர தின விழாக்கள் கொண்டாடப்படவுள்ளன.
 
இந்நிலையில், சுதந்திர தின விழா நடைபெறும் இடங்களில் அதிகளவிலான காவற்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவித்துள்ளன.
 
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் எதிர்வரும் 22ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,925 Views
23,334 Views
5,826 Views
10,227 Views
1,422 Views
56,416 Views
Top