Hirunews Logo
6+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95+3+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D
Friday, 10 August 2018 - 16:29
6 வருடங்களாக 3 சிறுமிகளை சீரழித்த காமக் கொடூரன்
3,454

Views
சியம்பலாண்டுவ எதிமலே பகுதியில் சிறுமிகள் மூவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் வசிக்கும் 48 வயதுடைய நபர் ஒருவரே கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வர்த்தகர் என்பதோடு அவரிடம் சிலர் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சிறுமிகளில் முதலாவது சிறுமி கடந்த 2012 ஆம் ஆண்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமிக்கு உழவு இயந்திரம் செலுத்துவதற்கு பயிற்சி அளிப்பதாக தெரிவித்து அழைத்து சென்றே துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு 14 வயதுடைய சிறுமியும் கடந்த ஜூலை மாதம் 9 வயது சிறுமியும் துஷ்பிரயோக படுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமிகளின் பெற்றோரிடம் காவல் துறையினர் வினவியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த அவர்கள் அவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெறவில்லை என அறிவித்துள்ளனர்.

எனினும் சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து அனைத்து விடயங்களையும் காவல் துறையினர் தெரிந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட குறித்த நபர் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதோடு அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் 48 வயதுடைய கொட்டியாகலை பகுதியில் வசிக்கும் ஐவரின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,159 Views
18,501 Views
11 Views
3,087 Views
58 Views
47,606 Views
Top