Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%21%21+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
Friday, 10 August 2018 - 16:37
மலையகத்தில் கடும மழை!! நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு (படங்கள்)
1,041

Views
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பிரதேசங்களில் நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காசல்ரீ , மாவுஸ்ஸாக்கலை மற்றும் மேல் கொத்மலை போன்ற நீர்த்தேக்கங்கள் இவ்வாறு பெருக்கெடுக்கும் நிலையை எட்டியுள்ளதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும் ,நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக நுவரெலியா மற்றும் ஹட்டன் கொழும்பு பிரதான வீதிகளில் மண் மேடுகள் சரிந்து விழும் அவதானம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதிகளில் வாகனங்களை செலுத்தும் போது மிகவும் அவதானத்துடன் செலுத்துமாறு காவற்துறையினர் சாரதிகளிடம் கோரியுள்ளனர்.

இதேவேளை , ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் ஸ்டெடன் தோட்டம் பிரதேசத்தின் வீதியொன்றில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து ஒரு மருங்கில் இடம்பெறுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.



        

 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
மலையகத்தில் சீரற்ற காலநிலை
Wednesday, 15 August 2018 - 11:13
மேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More
News Image
Hiru News Programme Segments
6,018 Views
13,733 Views
144 Views
883 Views
176 Views
41,888 Views
Top