Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
Friday, 10 August 2018 - 20:01
பிரான்சில் பாரிய வெள்ளப்பெருக்கு
974

Views
பிரான்சில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கை அடுத்து தென் பிரான்சில் இருந்து ஆயிரத்து 600 பேர் வரையில் பாதுகாப்பான இடத்திற்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் பெரும்பாலும் அந்த பிராந்தியத்தில் வசந்த காலத்தை ஒட்டி முகாமிட்டிருந்த மாணவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த முகாம்களை மேற்பார்வை செய்துவந்த ஜேமன் பிரஜை ஒருவர் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடும் மழையை அடுத்து ஏற்பட்ட சூறாவளியே இந்த திடீர் வெள்ளத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாநூறுக்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் அவசர சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுதவிர, நான்கு உலங்கு வாநூர்திகள் 24 மணி நேரமும் மீட்புப் பணிகளுக்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தென் பிரான்சின் பல பகுதிகள் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் காலநிலை சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பிருத்தானிய கால அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பிரான்சில் 17 ஆயிரம் வீடுகளுக்கான மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,159 Views
18,501 Views
11 Views
3,087 Views
58 Views
47,606 Views
Top