Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+34+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88
Friday, 10 August 2018 - 20:06
நாவற்குழி குடும்பங்களுக்கு எதிரான 34 வழக்குகள் இன்று விசாரணை
73

Views
யாழ்ப்பாணம் நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில், அத்துமீறி வசிப்பவர்கள் என கூறப்பட்ட பல குடும்பங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் இன்று 34 வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

சவாகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த இடத்தில் வீடமைப்பு திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று குறித்த குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் பேசி தீர்வொன்றை பெற்று கொள்ள வேண்டும் எனவே அதற்காக கால அவகாசம் நீதிமன்றில் கோரப்பட்டதற்கு அமைய, இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 62 வழக்குகளில் மீதி வழக்குகள் எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ இந்த மாதம் 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும், இதன்போது குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமராக இருந்தாலும் முதலமைச்சராக இருந்தாலும் நீதிமன்ற செயற்பாடுகள் அனைவருக்கும் சமமாக அமைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
மலையகத்தில் சீரற்ற காலநிலை
Wednesday, 15 August 2018 - 11:13
மேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More
News Image
Hiru News Programme Segments
6,018 Views
13,733 Views
144 Views
883 Views
176 Views
41,888 Views
Top