Hirunews Logo
33+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+858+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Friday, 10 August 2018 - 20:09
33 ஆயிரத்து 858 டெங்கு தொற்றாளர்கள்
119

Views
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் தொற்று காரணமாக 33 ஆயிரத்து 858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

டெங்கு நோய் தொற்று காரணமாக மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் கொழும்பு மாவட்டத்தில் 6416 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 3281 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 2121 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த வருடம் இதுவரையிலான காலப்பகுதியில், மலேரியா தொற்று காரணமாக இதுவரை 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் நான்கு பேர் இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று மலேரியா தொற்று நோய் தடுப்பு பிரிவின் கொழும்பு பிரதான அலுவலகத்தின் வைத்திய அதிகாரி மனோநாத் மாரசிங்க தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்திலேயே மலேரியா தொற்று காரணமாக அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மலேரியா தொற்று நோய் இலங்கையில் உருவாகவில்லை.

வெளிநாடுகளுக்கு செல்வோர் அங்கிருந்து மலேரியா தொற்று நோயை இலங்கைக்கு கொண்டு வருகின்றார்கள்.

கூடதலாக மலேரியா தொற்று நோய் இந்தியா மற்றும் மடகஸ்கார் அகிய நாடுகளிலிருந்தே இலங்கைக்கு காவப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,159 Views
18,501 Views
11 Views
3,087 Views
58 Views
47,606 Views
Top