Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E2%80%93+12+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Sunday, 12 August 2018 - 21:18
இந்தோனேசியா விமான விபத்து – 12 வயது சிறுவன் உயிருடன் மீட்பு
123

Views
இந்தோனேசியாவில் இடம்பெற்ற வானூர்தி விபத்தின் இடிப்பாடுகளுக்கு இடையே இருந்து 12 வயதான சிறுவர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

40 நிமிட நேர பயணத்தை மேற்கொண்டிருந்த இந்த வானூர்தியில் விமானி உட்பட 9 பேர் பயணித்திருந்தனர்.

அவர்களுள் குறித்த சிறுவனை தவிர ஏனையவர்கள் பலியாகினர்.

இன்று காலை பப்புவா நிவ்கினியா எல்லையின் மலை பிராந்தியத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

பயணித்துக் கொண்டிருந்த வானூர்தி ஒக்ஸிபில் வானூர்தி தளத்தில் தரையிறங்க வேண்டி நிலையில், வானூர்தியுடனான தொடர்புகள் நேற்று பகல் துண்டிக்கப்பட்டதாக கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்திருந்தது.

விபத்து இடம்பெற்ற பிரதேசத்தில் உள்ள கிராம மக்கள் பாரிய வெடிச் சத்தத்தை கேட்டதாக விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, 3 வருடங்களுக்கு முன் இதே பிராந்தியத்தில் இடம்பெற்ற வானூர்தி விபத்தொன்றில் 54 பேர் பலியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,954 Views
23,403 Views
5,916 Views
10,337 Views
1,436 Views
56,547 Views
Top