Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Sunday, 12 August 2018 - 21:33
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் சுங்க பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை
969

Views
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து தீண்பண்டங்கள் போன்ற போதைப்பொருள் வியாபாரம் ஒன்று மேற்கொள்ளப்படுவதாக இலங்கை சுங்க பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுங்க பிரிவினரால் விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளை அண்டிய பகுதிகளில் ஸ்டோபரி சுவையுடனான இந்த திண்பண்ட விற்பனை பரவலடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான திண்பண்டங்களை உண்ணும் பாடசாலை மாணவர்கள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நிகழ்வுகள் முதற்கொண்டு பதிவாகியுள்ளதாகவும் சுங்க பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

போதைப்பொருள் கலக்கப்பட்ட இத்தகைய திண்பண்டங்கள், சொக்லேட், செரி, கோலா, திராட்சை மற்றும் தோடை போன்ற சுவைகளில் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அறிமுகம் இல்லாதவர்கள் வழங்கும் உணவுகளை உட்கொள்வதை தவிர்க்குமாறும், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இது குறித்து அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் சுங்க பிரிவினர் கோரியுள்ளனர்.

இதேவேளை, மெதிரிகிரிய – மீகஸ்வெவ – விஹாரகம பகுதியில் சிறுவர்களை கடத்தும் சில முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,159 Views
18,501 Views
11 Views
3,087 Views
58 Views
47,606 Views
Top