Hirunews Logo
%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
Sunday, 12 August 2018 - 21:58
ஆப்கானிஸ்தானில் தொடரும் மோதல்கள்
66

Views
தாலிபான் போராளிகளுக்கும் அரச படையினருக்கும் இடையேயான மோதல் தொடர்ந்தும் இடம்பெறுவதாக ஆப்கானிஸ்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று தாலிபான் போராளிகள் அதிக எண்ணிக்கையில் காஸ்னி நகரை தாக்கியதனை அடுத்து, மோதல் ஆரம்பமானது.

இந்த மோதலில் குறைந்தது 25 காவற்துறை அதிகாரிகளும் ஒரு ஊடகவியலாளரும் பலியானதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நகரத்தில் உள்ள தொலைத் தொடர்பு கோபுரம் சேதமடைந்தமையினால் நகரத்துடனான தொடர்புகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அரச பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தலைநகர் காபுல் மற்றும் இந்த நகரத்துடனான பெருந்தெரு செல்வதனால் இந்த நகரம் தாலிபான் மற்றும் அரச படைகளுக்கு கேந்திர நகரமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட செய்தியில் காஸ்னி நகரம் தற்போது அரச படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக துருப்பினர் வரவழைக்கப்பட்டு நகரம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நகரின் முக்கிய பகுதிகள் பல தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டிலேயே உள்ளதாக தாலிபான்களின் பேச்சாளர் ஸபிஹூல்லா மஜாஹிட் தெரிவித்துள்ளார்.

இதுதவிர பாதுகாப்பு படையை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏராளமான இராணுவத் தளபாடங்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
மலையகத்தில் சீரற்ற காலநிலை
Wednesday, 15 August 2018 - 11:13
மேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More
News Image
Hiru News Programme Segments
5,984 Views
13,544 Views
1,046 Views
703 Views
156 Views
41,696 Views
Top