துமிந்த சில்வாவின் மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு விரைவில்

Monday, 13 August 2018 - 7:20

%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவிற்கு எழுத்துமூல விளக்கமளிக்கும் காலம் நிறைவடைந்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் சில தினங்களில் குறித்த மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கவுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேன்முறையீட்டு மனுவில், அனைத்து பிரஜைகளுக்கும் கிடைக்கவேண்டிய நியாயமான வழக்கு விசாரணையொன்று தமது விடயத்தில் இடம்பெறவில்லையென குறிப்பிட்டுள்ளார்.

இந்த மேன்முறையீட்டு விசாரணை ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் பிரதி மன்றாடியார் நாயகம் பங்களிப்பில் சுமார் 5 மாதங்களாக இடம்பெற்றிருந்தது.

இந்த விசாரணை பிரதம நீதியரசர் பிரசாத் டெப் தலைமையிலான உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது தர்க்கங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஆதாரங்களின் அடிப்படையில் அல்லாது, அவரொரு பிரபலமான அரசியல்வாதி என்ற அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டதாக குறிப்பிட்டனர்.

இந்த தீர்ப்பினை ஆயிரம் தடவைகள் வாசித்தாலும் எதனடிப்படையில் துமிந்த சில்வா குற்றவாளியாக்கப்பட்டார் என்பதனை அறிய முடியவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் இதன்போது சட்டமா அதிபர் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ப்பட்ட பல விடயங்கள் ஜனாதிபதி சட்டதரணிகளால் உயர் நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டது.

• துமிந்த சில்வா மீது முதலாவதாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டமை

• துமிந்த சில்வாவின் தலைப் பகுதியில் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவினால் இரண்டு முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை

• அதில் துமிந்த சில்வா முதலாவதாக உயிராபத்து மிக்க காயங்களுக்கு உள்ளானமை

• துமிந்த சில்வா உடனடியாக சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து அகற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை

• முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா எந்த சந்தர்ப்பத்திலும் துப்பக்கி பிரயோகம் மேற்கொள்ளாமை

• எந்த சந்தர்ப்பத்திலும் துமிந்த சில்வா, எந்தவொறு ஆயுதத்தையும் கையாளாமை போன்ற விடயங்கள் அதில் உள்ளடங்குகின்றன.

இதுதவிர பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் பாதுகாவலரான காமினி என்பவர் முதலாவதாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமையே அனைத்துக்கும் காரணம் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த துமிந்த சில்வா, முர்ச்சை அடைந்ததன் காரணமாக அதன் பின்னர் இடம்பெற்ற எந்தவொரு சம்பவத்திற்கும் துமிந்த சில்வா பொறுப்பாளியாக முடியாது என சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தகைய ஒரு சூழ்நிலையில் துமிந்த சில்வா மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு குற்றவாளியாக்குவதற்கான இயலுமை இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணிகள், ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழாத்திடம் எடுத்துரைத்தனர்.

அத்துடன், துப்பாக்கி பிரயோக சம்பவத்தினை மாத்திரம் அடிப்படையாக கொண்டு துமிந்த சில்வாவை குற்றவாளியாக்க முடியாததன் காரணமாக, அந்த சம்பவத்திற்கு முன்னர் இடம்பெற்றதாக குறிப்பிட்டு சில போலியான சாட்சிகளை உருவாக்கி, மேல் நீதிமன்ற வழக்கினை முன்கொண்டுச் சென்றுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த சாட்சிகளை நூறு சதவீதம் ஏற்க முடியாது என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், நடுநிலையான வழக்கு விசாரணை ஒன்றை முன்னெடுக்க விடாமல் துமிந்த சில்வா குற்றவாளியாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தமது நிலைப்பாட்டுக்கு அமைய செயற்படாதவர்கள், பிரதிவாதிகளாக பெயரிடப்படுவார்கள் என சட்டத்தரணிகளால் அச்சுறுத்தப்பட்டு, துமிந்த சில்வாவிற்கு எதிராக போலியான சாட்சியங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணிகள் மேல் நீதிமன்ற விசாரணையை மேற்கோள்ளிட்டு, சுட்டிக்காட்டினர்.

இதுதவிர, முதலாவது துமிந்த சில்வாவிற்கே துப்பாக்கி காயம் ஏற்பட்டதாக சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், தீர்ப்பில் பரஸ்பர முரண்பாடொன்றே தென்படுவதாக ஜனாதிபதி சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

துமிந்த சில்வா குறித்த இடத்தில் இருந்து திருப்பி அனுப்புவதற்கு முயற்சிக்கப்பட்ட போதே, பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் தரப்பினரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் தரப்பினரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படாவிட்டால், இரண்டு தரப்பினரும் சுமூகமாக அங்கிருந்து அகன்றுச் சென்றிருப்பார்கள் என சட்டத்தரணிகள் மேலும் சுட்டிக்காட்டினர்.

இதுத்தொடர்பில் மேலும் கருத்துக்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணிகள், துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளும் நோக்கில் துமிந்த சில்வா குறித்த இடத்திற்கு வரவில்லை என்பது தெளிவாவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதுதவிர, துமிந்த சில்வா மீது, குற்றங்களைச் சுமத்துவதற்காக துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை, போலியான சம்பவம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர்.

குறித்த துப்பாக்கியை கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட சந்தேக நபர், வானூர்தி தளத்தில் இருந்து வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொண்டவர்களால் வெற்று கடதாசிகளில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணிகள் மேலும் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், இது தொடர்பில் கருத்துரைத்துள்ள ஜனாதிபதி சட்டத்தரணிகள், துமிந்த சில்வாவை குற்றவாளியாக்கும் நோக்கில் நீதிமன்ற தீர்ப்பு தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

நீதிமன்ற தீர்ப்பு தயாரிப்பின் போது, வழக்கு விசாரணையில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள், சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டதா? என்பதை ஆராயாமல், அரச தரப்பு சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட தர்க்கங்களை மாத்திரம் கவனத்தில் கொண்டுள்ளதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், குறிப்பிட்ட சாட்சியங்களில் பரஸ்பர முரண்பாடுகள் மற்றும் 62 குறைப்பாடுகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு அதன் சாதக தன்மையை துமிந்த சில்வா தரப்பினருக்கு வழங்க வேண்டிய நிலையில், அது கவனத்திற்கு கொள்ளப்படாமல் கைவிடப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த அனைத்து வாய்மூல விளக்கங்களும் கடந்த 25 ஆம் திகதி நிறைவடைந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதிக்குள் அனைத்து தரப்பினரும் தமது எழுத்து மூல விளக்கங்களை தாக்கல் செய்யுமாறு, பிரதம நீதியரசர் பியசாத் டெப் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னர் மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் என பிரதம நீதியரசர் அறிவித்துள்ளார்.









Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips