பிரபல பாடகி நேற்று இரவு திடீர் மரணம்!!

Friday, 17 August 2018 - 10:12

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%21%21
பிரபல அமெரிக்க கிளாசிக் பாடகி அரேத்தா ஃப்ராங்ளின் உடல்நலக் குறைவால் நேற்று அவரது இல்லத்தில் உயிரிழந்தார். 

ஹொலிவுட் நட்சத்திரமாக முடிசூட்டப்பட்டுவரும் பாரம்பரியமான கிளாசிக் பாடல்களை பாடியவருமான அரேத்தா ஃப்ராங்ளின் தனது 76 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.

சிறு வயது முதலே பாடல்களை பாடி உலகம் முழுதும் அமெரிக்காவின் கலாச்சார சின்னமாக விளங்கிய அவர் 18 கிராமி விருதுகள் பெற்றுள்ளார்.

1987-ம் ஆண்டு ராக் அண்டு ரோல் வாழ்த்தரங்கில் பங்கேற்ற முதல் பெண் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார். 

புற்றுநோய் காரணமாக தனது இசைப்பயணத்தில் இருந்து கடந்த வருடம் ஓய்வு பெற்ற இவர், நேற்று அவரது வீட்டில் காலமானார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் ஒபாமா உட்பட பலரும் அரேத்தா ஃப்ராங்ளின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips