மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவித்த இலங்கை அரசாங்கம்

Friday, 17 August 2018 - 13:01

%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் இறுதி கிரிகைகளில் கலந்து கொள்ளும் பொருட்டு இலங்கை அரசாங்கத்தின் சார்பில், சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியல்ல இன்று அதிகாலை இந்தியா நோக்கி பயணமானார்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்யின் இறுதி கிரியைகள் புதுடில்லியில் இன்று மாலை இடம்பெறவுள்ளது.

இதில் கலந்து கொள்ள உள்ள அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல, இலங்கை அரசாங்கத்தின் இரங்கல் செய்தியை, இந்திய அரசாங்கத்திற்கும், வாஜ்பாய்யின் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கவுள்ளார்.

இதனிடையே, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது ட்டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கையின் சுயாட்சிட்யை உறுதிப்படுத்த இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அளப்பரிய சேவையாற்றியுள்ளதாக பிரதமர் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதுபோல், இந்திய தமது மிகச் சிறந்த அரசியல்வாதியையும் சிறந்த அறிவாளியையும் இழந்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips