அக்கினியுடன் சங்கமித்தார் வாஜ்பாய்

Friday, 17 August 2018 - 19:59

%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயின் இறுதிக் கிரிகைகள் அவரது மகள் நமிதா பட்டாச்சாரியாவினால் மேற்கொள்ளப்பட்டு தீ மூட்டப்பட்டது.

டெல்கி யமுனா நதிக்கரைக்கு ஊர்வலமாக அவரின் பூதவுடன் எடுத்துச் செல்லப்பட்ட போது நான்கு கிலோ மீட்டர் தூரத்தையும் பிரதமர் நரேந்திர மோடியும் நடந்தே சென்றார்.

நீண்ட கால சுகவீனத்தின் பின்னர் நேற்று மரணமான வாஜ்பாயின் இறுதி கிரிகைகள் பூரண அரச மரியாதையுடன் இடம் பெற்றது.

முன்னதாக இந்திய அரசாங்கத்தால் நாள் துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்கி வீதியின் ஊடாக சென்ற இறுதி ஊர்வலத்தின் போது பொதுமக்கள் மலர்தூவி மரியாதையினை செலுத்தினர்.

முன்னதாக இன்று காலை அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அவரது பூதவுடல், மக்களின் அஞ்சலிக்காக பாரதீய ஜனதா கட்சியின் காரியாலயத்தில் அமைக்கப்பட்ட மலர் மேடையில் வைக்கப்பட்டது.

பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம் நாத் கோவிந், முன்னாள் ஜனாதிபதி பிரநாப் முக்கர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட ஏராளமானவர்கள் தமது இறுதி மரியாதையினை செலுத்தியிருந்தனர்.

மூன்று முறை இந்தியாவின் பிரதமராக கடமையாற்றிய அட்டல் பிஹாரி வாஜ்பாய் 2009 ஆண்டின் பின்னர் கடும் சுகவீனமடைந்ததன் காரணமாக பொது நிகழ்வொன்றிலும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips