கைகுலுக்க மறுத்த முஸ்லிம் பெண்..

Saturday, 18 August 2018 - 12:02

+%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D..
விட்சர்லாந்தில் சகஜமாக கைகுலுக்க மறுத்த முஸ்லிம் தம்பதிக்கு குடியுரிமை வழங்க முடியாது என லாசானே நகர நிர்வாகம் மறுத்து விட்டது.

சுவிட்சர்லாந்தில் லாசானே நகரில் வெளிநாட்டை சேர்ந்த முஸ்லிம் கணவன்-மனைவி குடியுரிமை கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.

அதை தொடர்ந்து அவர்களிடம் நகரின் துணைமேயர் பியாரே-அன்டோனி ஹில்ட்பிரான்ட் தலைமையில் 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது.

அப்போது முஸ்லிம் தம்பதி அவர்களிடம் சகஜமாக கைகுலுக்க மறுத்துவிட்டனர்.

இஸ்லாம் சட்டப்படி ஒரு ஆண் சம்பந்தமில்லாமல் பெண்ணுடனும், ஒரு பெண் மற்ற ஆண்களுடனும் கை குலுக்க கூடாது என காரணம் கூறப்பட்டது.

அதைதொடர்ந்து அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் முஸ்லிம் தம்பதிக்கு சுவிட்சர்லாந்து குடியுரிமை வழங்க முடியாது என லாசானே நகர நிர்வாகம் மறுத்துள்ளது.

கைகுலுக்க மறுப்பு தெரிவித்ததால் குடியுரிமை மறுக்கப்படுவதாக மேயர் கிரிகோரி ஜூனாட் தெரிவித்தார்.

கடந்த 2016-ம் ஆண்டில் சிரியாவை சேர்ந்த சகோதரர்கள் 2 பேர் பள்ளி ஆசிரியைக்கு கைகுலுக்க மறுத்ததால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips