கோபி அன்னான் காலமானார்..!!

Saturday, 18 August 2018 - 15:59

%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D..%21%21
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந்தார். 

ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளராக பதவி வகித்தவர் கோபி அன்னான்.

கானா நாட்டில்  08-04-1938 ஆம் ஆண்டு பிறந்த இவர் , 01-01-1997 ஆம் ஆண்டு  ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 31-12-2006 ஆம் ஆண்டு  ஓய்வு பெற்றார். 

"ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகத்திற்காக உழைத்ததற்காக" கோபி அன்னான் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு விருது வழங்கப்பட்டது.

பதவி ஓய்வுக்கு பின்னர் 23-2-2012 ஆம் ஆண்டு  முதல் 31-8 -2012 ஆம் ஆண்டு  வரை, சிரியாவிற்கான ஐ.நா. அரபு லீக் கூட்டுச் சிறப்பு பிரதிநிதியாக இருந்தார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கியிருந்த கோபி அன்னான் உடல்நலக்குறைவால் இன்று மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips