புகைபிடிப்பவரா நீங்கள்...!!

Sunday, 19 August 2018 - 13:41

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%21%21+
புகைபிடிக்கும் பழக்கம் அல்லாத வயது வந்தவர்கள் நுரையீரல் நோய் காரணமாக உயிரிழப்பது அதிகம் என அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

அந்த ஆய்வு குழுவினால் வெளியிடப்பட்ட முழு அறிக்கை அமெரிக்கன் ஜேனர்ல் ஒப் பிரிவெட் மெடிசின் என்ற மருத்துவ சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

புகை பிடிக்காதவர்களின் பெற்றோர், புகைப்பிடிப்பவர்களாக இருப்பின் அவர்களுடன் வசிக்கும் பிள்ளைகளுக்கு புகைப்பிடித்தல் தொடர்பான நோய் ஏற்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆய்வாளர்கள் 70 ஆயிரத்து 900 புகைப்பிடிக்காதவர்கள் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, அமெரிக்க புற்றுநோய் தடுப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையை முற்றாக மாற்ற வேண்டுமாயின், புகைப்பிடித்தலை பெற்றோர் உடனடியாக கைவிட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, 10 மணி நேரம் புகைப்பிடிப்பவர்கள் அருகாமையில் உள்ள, புகைப்பிடிக்காதவர்களுக்கு இருதய நோய் வருவதற்கு 27 சதவீத வாய்ப்புள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நுரையீரல் தொடர்பான நோய் 42 சதவீதம் அதிகரிப்பதற்கு ஏதுநிலை காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச ரீதியாக புகைத்தல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பல்வேறு அமைப்புகள் தொடர்ச்சியான ஆலோசனைகளை வலியுறுத்தி வருகின்றன.

இதற்கேற்ற வகையில் பிரித்தானிய நுரையீரல் நிதியத்தின் மருத்துவ நிபுணர் நிக் ஹெப்கிங்ஸன் கருத்து தெரிவிக்கையில் புகைப்போருடன் வாழும் சிறார்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips