இம்ரான் கானுடன் சிறந்த உறவை பேண விரும்புவதாக அமெரிக்கா தெரிவிப்பு

Sunday, 19 August 2018 - 19:37

+%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் சத்திய பிரமாணம் செய்த நிலையில், அவருடன் சிறந்த உறவை பேண விரும்புவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட அவருடன் பணியாற்ற அமெரிக்கா தயார் நிலையில் உள்ளதாக, இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஹீத நிவரட் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பிராந்தியத்தின் சமாதானம் மற்றும் அபிவிருத்தியினை மேம்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த 70 வருடங்களாக பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான உறவு சிறந்த முறையில் திகழ்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று இஸ்லாமாபாத்தில், இம்ரான்கான் பாகிஸ்தானின் 22வது பிரதமராக பதவியேற்றார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குடாரஸின் பேச்சாளர் இம்ரான் கானிற்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips