யானைக்கும் மனிதர்களுக்கும் இடையிலான பிரச்சினை தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது

Sunday, 19 August 2018 - 20:02

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81+
யானைக்கும் மனிதர்களுக்கும் இடையிலான பிரச்சினை தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக வன ஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், யுத்தத்திற்கு கண்ட தீர்வு போன்று யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட மக்கள் விலங்குகளால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு அங்கு விஜயம் செய்த அமைச்சர், திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வனஜீவராசிகள் சட்ட மூலத்திற்கு அமையவே பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அமைச்சருக்கு ஏற்ற வகையில் சட்ட மூலத்தை புறந்தள்ளி செயற்பட முடியாது.

ஒரு வருடத்திற்குள் நாட்டின் சகல பிரதேசங்களிலும் யானை வேலி அமைக்கப்படும் என்றும் அதன் மூலம் நூற்றுக்கு 95 வீதமான பிரச்சினைகள் தீர்க்கப்படுமென தான் எதிர்பார்ப்பதாக அமைச்சர் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், யானைகள் இந்த நாட்டின் தேசிய வனவிலங்காக கருதப்படுகிறது என குறிப்பிட்டார்.

அவை பாதுகாக்கப்பட வேண்டியவை, அதுபோன்றே மக்களின் விவசாய பயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.

விவசாய பயிர்களை பாதுகாப்பதற்காக யானைகளின் உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது.

யானைகள் பாதுகாக்கப்பட வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

அதற்கான நடவடிக்கைள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவேண்டும்.

வேலியமைத்து பயிர்களின் அழிவை தடுத்து, பொது மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் அவர் இதன்போது வலியுத்தினார்.

இதேவேளை, வனலாகா, வனவிலங்கு திணைக்களம், தொல்பொருள் ஆராட்சி திணைக்களம் ஆகிய கையகப்படுத்தி வைத்துள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் கோரிக்கை விடுத்தார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips