நவுறு தீவில் தங்கவைக்கப்பட்டுள்ள ஏதிலிச் சிறார்களை விடுவிக்குமாறு வலியுறுத்தல்

Tuesday, 21 August 2018 - 10:59

%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%8F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88++%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
பசுபிக் தீவான நவுறு தீவில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏதிலிச் சிறார்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் ஒன்றியம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.

குறித்த முகாமில் தடுப்பில் உள்ள 12 வயதான சிறுவன் ஒருவர், ஒருவாரகாலமாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே குறித்த அமைப்பு அங்குள்ள ஏதிலி சிறார்கள் அனைவரையும் விடுவிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

தற்போது குறித்த முகாமில் 119 சிறார்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்கின்றவர்களே இந்த முகாமில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்படுகின்றனர்.

அவுஸ்திரேலியாவின் இந்த ஏதிலிகள் கொள்கைக்கு கடும் எதிர்ப்புகள் வெளியாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips