வேதன மீளாய்வு தொடர்பான விசேட ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் நியமனம்

Wednesday, 22 August 2018 - 10:03

%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+
அரச சேவையினரின் வேதன மீளாய்வு தொடர்பான விசேட ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

எஸ்.ரனுக்கே மேற்படி ஆணைக்குழுவின் தவிசாளராகவும், எச்.ஜீ.சுமனசிங்க ஆணைக்குழுவின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதில் பி.தங்கமயில் என்ற தமிழர் ஒருவர் உள்ளடங்குகிறார்.

அரச சேவையினரின் வேதன மீளாய்வு தொடர்பான விசேட ஆணைக்குழுவிற்கு நான்கு பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அரச சேவையினரின் வேதனங்கள் மற்றும் படிகள் குறித்து தற்போது நடைமுறையிலுள்ள வேதன சுற்றறிக்கை ஏற்பாடுகள் மீது கவனம் செலுத்தி, தொடரூந்து திணைக்களத்தின் கண்காணிப்பு முகாமைத்துவச் சேவைக்கு உததேசிக்கப்பட்டுள்ள வேதன அளவுத் திட்டத்தை வழங்கும்போது ஏற்படும் அழுத்தங்களை ஆராய்தல் மற்றும் அதன்மூலம் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திறன்முறைகளை முன்மொழிதல்.

அண்மையில் வேதனங்கள் மற்றும் படிகளை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட தொடரூந்து சேவை, சுகாதாரம், உயர்கல்வி மற்றும் கல்வி, தபால் சேவை ஆகிய துறைகளுக்காகத் தற்போது நடைமுறையிலுள்ள வேதன சுற்றறிக்கைகளின் மூலம் முரண்பாடுகள் எதுவும் ஏற்பட்டிருப்பின் அவற்றைக் குறைப்பதற்காகத் தீர்வுகளை முன்மொழிதல்.

நாடளாவிய சேவைகளுக்குரிய வேதனப் பிரச்சினைகள் போன்று, மேற்கொள்ளப்பட்டுள்ள வேதன அதிகரிப்புகள் காரணமாக தற்போது எழுந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள வேதன முரண்பாடுகளைக் குறைப்பதற்கு உரிய பரிந்துரைகளை சமர்ப்பித்தல்.

சமமான பொறுப்புக்கள் வகிக்கும் அல்லது அதை ஒத்த தகைமைகளுடன் கூடிய தொழில் புரிபவர்களினால் அரசாங்க மற்றும் பகுதி அரசாங்கத் துறைகளில் பெறப்படும் வேதனங்கள் மற்றும் படிகளுக்கு இடையில் உள்ள முரண்பாடுகளைக் குறைப்பதற்காக வழிகாட்டும் வேதன கட்டமைப்புகள் தொடர்பில் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அரச சேவையினரின் வேதன மீளாய்வு தொடர்பான இந்த விசேட ஆணைக்குழு, தமது பணிகளை நிறைவேற்றுவதற்கு இரண்டு மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மூலம் பொறுப்பளிக்கப்படும் கருமங்களை நிறைவேற்றுவது தொடர்பில் அவசியமானவாறு விசாரணைகளை மேறகொள்வதற்கும், விடயங்களைப் புலனாய்வு செய்யும் பொருட்டு ஆலோசனைகளை வழங்குவதற்கும் ஆணைக்குழுவிற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழுவினால் ஆலோசனை வழங்கப்படக்கூடிய அல்லது தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு உதவி கோரக்கூடிய எல்லா அரசாங்க உத்தியோகத்தர்களும் அத்தகைய வேறு ஆட்களும் அந்தக் கருமம் தொடர்பாக அத்தகைய ஆலோசனைகளுககு அமைவாக செயற்பட வேண்டுமென்றும் அளிக்கக் கூடியவாறான எல்லா உதவிகளையும் வழங்க வேண்டும்.

அவ்வாறு வழங்கக்கூடிய அனைத்து தகவல்களையும் கொடுத்துதவ வேண்டுமென்றும் சகல அரசாங்க உததியோகத்தர்களையும் ஏனைய ஆட்களையும் தாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்பதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips