Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF
Monday, 10 September 2018 - 7:41
வடகொரிய தலைவருக்கு நன்றி கூறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி
2,176

Views
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளதுடன் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுத ஏவுகணைகள் இல்லாமல் வடகொரியாவின் 70வது ஆண்டு விழாவில் இராணுவ அணிவகுப்பை நடத்தியதற்காகவே இவ்வாறு டொனால்ட் ட்ரம்ப் நன்றியினை தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில் கமியூனிஸ்ட் ஆட்சி மலர்ந்ததின் ஆண்டு விழா, ஆண்டு தோறும் செப்டம்பர் 9 ஆம்திகதி பிரமாண்டமாக நடைபெறும்.

அதனை முன்னிட்டு இடம்பெறும் இராணுவ அணிவகுப்பு, உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் அமையும்.

இராணுவ அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் முக்கிய இடம் பிடிக்கும்.

எனினும் இந்த முறை இடம்பெற்ற அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறவில்லை.

பிற பாரம்பரிய ஆயுதங்கள், தளவாடங்கள் மட்டுமே இடம்பெற்று இருந்தன.

இந்த நிலையில், ஏவுகணைகள் இல்லாமல் இராணுவ அணி வகுப்பை நடத்திய கிம் ஜாங் அன்னை பாராட்டி டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

இது வடகொரியாவின் மிகப்பெரிய நேர்மறையான நடவடிக்கையாகும்.

தங்களுக்குள் மோதல் வெடிக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு அவர்களின் எண்ணம் தவறானது என தாங்கள் இருவரும் சேர்ந்து நிரூபிப்போம் என டிரம்ப் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,240 Views
27,919 Views
196 Views
16,064 Views
233 Views
62,933 Views
Top