Hirunews Logo
17+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
Monday, 10 September 2018 - 21:40
17 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்பட்டுள்ள சுரங்க தொடரூந்து நிலையம்
94

Views
17 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் இரட்டை கோபூர தாக்குதலில் முற்றாக சேதமடைந்த உலக வர்த்தக மைய கட்டிடத் தொகுதியின் சுரங்க தொடரூந்து நிலையம் மீண்டும் போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு அல்கைதா தீவிரவாதிகளினால் இரட்டைக் கோபூரம் மீது மேற்கொள்ளப்பட்ட வாநூர்தி தாக்குதலில், கோபுரத்தின் சுரங்க தொடரூந்து நிலையம் சேதமடைந்ததை அடுத்து அந்த நிலையம் மூடப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தொடரூந்து நிலையத்தை சீரமைக்கும் பணி ஆரம்பமாகியது.

சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், வழமையான போக்குவரத்து சேவைகள் நேற்று முதல் இடம்பெறுகின்றன.

2001 ஆம் ஆண்டு காலை வேளை மேற்கொள்ளப்பட்ட இரட்டை கோபூர தாக்குதலில் 3 ஆயிரம் பேர் பலியாகினர்.

இது தவிர, ஏராளமானவர்கள் காயமடைந்தனர்.

அத்துடன், 110 மாடிகளை கொண்ட இரட்டை கோபூரம் உட்பட் உலக வர்த்தக மையத்தச் சேர்ந்த பல கட்டடங்கள் முற்றாக அல்லது பகுதியளவில் சேதமடைந்தன.









Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,677 Views
16,785 Views
1,885 Views
1,018 Views
41 Views
45,148 Views
Top