Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88...%21
Tuesday, 11 September 2018 - 11:03
காதலனின் மரணம் வரை காத்திருந்து மரணித்த பின்னரும் காதலனுக்காக வாழும் பெண்ணின் கண்ணீர் கதை...!
51,579

Views
இலங்கையில் மாத்திரமில்லை உலக நாடுகளில் வசிக்கும் அனைவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக சென்று சேர்ந்திருக்கும் ஒரு பரபரப்பான மனதை நெகிழ வைக்கும் காணொளி ஒன்றை தான் நீங்கள் பார்வையிட போகின்றீர்கள்.

ஒருவருக்கு ஒருவர் மீது அக்கறை கொள்வது தற்போது வெகு தொலைவு சென்று விட்டது.

அதிலும் காதலிப்பவர்கள் கரம் பற்றுவதானது அரிதாகவே காணப்படுகின்றது.

தனது காதலனுக்கு மிகவும் கொடிய புற்றுநோய் தாக்கிய பின்னரும் காதலன் இயற்கையாகவே மரணம் அடையும் வரை அவரை பாதுகாப்பாக அவர் மீது வெறுப்பு கொள்ளாது அனைத்து உதவிகளை அவருக்கு புரிந்து இவ்வுலகை விட்டு விடைகொடுத்த அந்த யுவதியை நினைத்து கண்கலங்காதவர்களே இருக்க மாட்டார்கள்.

தாய்லாந்தில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்தேறிய இந்த சோக சம்பவம் தற்பொழுதே இணையத்தளங்களை தன்வசப்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் Songkhla மாகாணத்தில் வசிக்கும் Pooh Chokchai Kaew என்ற இளைஞரும் Atittaya Chumkeaw என்ற யுவதியும் காதலர்கள். மிகவும் அன்பானவர்களாக ஒருவருக்கு ஒரு இயற்கையை சாட்சியாக கொண்டு நியதியுடன் காதலித்து வந்துள்ளனர்.

பல கனவுகளுடன் காதலித்து வந்த இருவருக்கு கனவிலும் நினைத்து பார்க்க முடியாத கொடிய நோய் Pooh Chokchai Kaew என்ற இளைஞரை தாக்கியது.

குறித்த நோயினால் பாதிக்கப்பட்ட இளைஞர் கட்டம் கட்டமாக தனது பொழிவான தோற்றத்தை இழந்து வந்தார்.

முகத்தில் பருக்களை போன்று சிறு சிறு கொப்பளங்கள் ஏற்பட்டதாகவும் பின்னர் அது பாரிய காயமாக மாறியதாகவும், அவரே தெரிவித்துள்ளார்.

எனினும் தன்னை ஆதரித்தவர்கள் தன்மீது சிறிதளவும் சலிப்பின்றி என்னுடன் வாழ்ந்தமைதான் தனக்கு கடினமாக உள்ளதாகவும், நண்பர்களையும் தனது காதலியை விட்டு பிரிய தனக்கு மனம் இடம்கொடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளதோடு, இயற்கையில் விதிக்கு யாராலும் முரண்பட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு சிறிது காலம் செல்கையில் தனது முகம் நினைத்து பார்க்க முடியாதளவிற்கு பாரிய மாற்றங்களுடன் காணப்பட்டதாகவும், அதனை பொருட்படுத்தாது தனக்கு அனைத்து உதவிகளையும் புரிந்து தன்னுடைய காதலிக்கு இறைவன் நல்லாசி புரிய வேண்டும் எனவும் அந்த இளைஞர் ஒரு செவ்வியில் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

குறித்த இளைஞருக்கு மரணம் பற்றிய சிந்தனையை போக்குவதற்கு அவரின் நண்பர்கள் இசைக்கருவிகளை இசைப்பதும் பாடல்களை பாடுவதுமாக அவரை கடைசி நிமிடம் வரை மகிழ்ச்சியாக பராமறித்துள்ளனர்.

இவ்வாறு காலம் செல்கையில் குறித்த இளைஞர் இவ்வுலகை விட்டு பிரிகின்றார்.

எனினும் குறித்த இளைஞரின் காதலி அவரின் உடலை விட்டு பிரியாமல் கண்ணீர் சிந்தியபடி இறுதி கிரியைகள் நிறைவு பெறும் வரை காத்திருக்கின்றார்.

Pooh Chokchai Kaew இந்த உலகை விட்டு பிரிந்தாலும் என் நினைவுகளில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என தெரிவித்துக்கொண்டு தனியே தனது வாழ்க்கையை கடத்திக்கொண்டிருக்கிறார் (Atittaya Chumkeaw) அந்த இளம் கைம்பெண்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,014 Views
20,652 Views
2,622 Views
6,544 Views
613 Views
51,940 Views
Top