சற்று முன்னர் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் வரை பலியானதாக தகவல் வெளியாகி உள்ளன.
தெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு மலைப்பகுதியில் இன்று பயணிகளுடன் பேருந்து ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விபத்தில் 45 பேர் வரை இறந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், விபத்தில் காயமடைந்து 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
