Hirunews Logo
%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88
Tuesday, 11 September 2018 - 19:52
நேரடி விமான சேவை
1,091

Views
இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையில் நேரடி விமான சேவையினை ஆரம்பிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

வியட்நாமில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொள்ளச் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வியட்நாம் பிரதமர் கிரையன் சூன் புக்கை சந்தித்து கலந்துரையாடினார்.

அந்த கலந்துரையாடலின் போதே விமான சேவைக் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு, தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு தயாராகவிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் வியட்நாமில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வியடநாம் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக இரண்டு நாடுகளினதும் வீசா நடைமுறையை மேலும் விரிவுப்படுத்துவது குறித்து விரைவில் கலந்துரையாடல் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,726 Views
16,970 Views
12 Views
1,179 Views
84 Views
45,338 Views
Top