Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 12 September 2018 - 12:54
போலி சாட்சியங்கள் வழங்கியிருந்தால் அது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்
1,567

Views
பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குவிடம் போலி சாட்சியங்கள் வழங்கியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் நீதிமன்றிற்கு அறிக்​கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபர் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிணைமுறி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குற்ற விசாரணை திணைக்களம் தாயாரித்திருந்த விசாரணை அறிக்கையை நன்றாக ஆராய்ந்ததன் பின்னர் சட்ட மா அதிபர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மற்றும் பிணை முறி விவகாரத்துடன் தொடர்புடைய அனைவரிடமும் சாட்சியங்களை பெற்றுக்கொள்ளுமாறும் சட்ட மா அதிபர் கூறியுள்ளார்.

குறித்த தகவல்களுக்கு அமைய பிணைமுறி ஆணைக்குழுவில் போலி தகவல்களை வழங்கியதான தெரிவிக்கப்படும் விவகாரம் தொடர்பில் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,700 Views
16,896 Views
1,968 Views
1,098 Views
65 Views
45,244 Views
Top