Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D
Wednesday, 12 September 2018 - 13:33
தமிழக அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை வரவேற்ற ராதாகிருஷ்ணன்
120

Views
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற 7 பேரையும் விடுவிப்பதற்கு தமிழக அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை, கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் வரவேற்றுள்ளார்.

இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர் சென்னை ஊடக மையத்தில் கருத்து வெளியிடுகையில் இதனைக் கூறியுள்ளார்.

இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டவர்களில் இலங்கையர்களும் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு தற்போது வழங்கப்படவுள்ள நிவாரணத்துக்காக காத்திருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹிட், தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பளித்து, இராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ளவர்களது விடுதலை தொடர்பில் அவதானம் செலுத்துவார் என்று நம்புவதாக, தமிழக மீன்பிடித்துறை அமைச்சர் டி..ஜயகுமார் தெரிவித்துள்ளார்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து குறித்த ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஆளுனருக்கு குறிப்பிட்ட கால வரையறை எதனையும் நிர்ணயிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,199 Views
21,134 Views
3,161 Views
7,202 Views
841 Views
52,819 Views
Top