Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
Wednesday, 12 September 2018 - 15:15
முல்லைத்தீவில் திடீரென உயிரிழந்து மிதக்கும் மீன்கள் (படங்கள்)
6,699

Views

முல்லைத்தீவு - வட்டுவாகல் மற்றும் நந்திக்கடல் பாலத்திற்கு அருகில்  பெருந்தொகையான மீன்கள் இத்தினங்களில் உயிரிழப்பதாக அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் முல்லைத்தீவு உள்ளிட்ட பல இடங்களில் நிலவுகின்ற கடும் வறட்சி காரணமாக நீர் வெப்பமடைந்து இந்த மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த ஆற்றுப்பகுதியில் நீர் வற்றி காணப்படுவதுடன், மீன்கள் கொத்து கொத்தாக மடிந்து கரையொதுங்கியிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

மேலும், மீன்கள் இறந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதாகவும், அப்பகுதியில் செல்வோர் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முந்தைய வருடங்களிலும் , வறட்சியான காலநிலையின் போது மீன்கள் உயிரிழந்து மிதந்ததாகவும் , எனினும் இம்முறை அது தீவிரமடைந்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

இப்பகுதியில் மீன்கள் உயிரிழப்பதால் மீனவர்கள் கடும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 


    
 

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,261 Views
21,265 Views
3,342 Views
7,392 Views
893 Views
53,060 Views
Top