Hirunews Logo
%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+22+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
Wednesday, 12 September 2018 - 16:41
உந்துருளி விபத்தில் 22 வயதுடைய இளைஞர் பலி (காணொளி)
15,891

Views
சூரியவெவ கிரிஹிப்பன்ஹார பிரதான வீதியின் செவனகல நுகேகலயாய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உந்துருளியொன்றும் சிறிய கை டிரக்டர் ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

செவனகல ரண்வெலிகம  பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உந்துருளி முச்சக்கரவண்டியொன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலே எதிர்திசையில் வந்த  டிரக்டரில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் , உந்துருளி வெடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்த இளைஞர் மருத்துவ பீடத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர் என தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் குறித்த டிரக்டரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் செவனகல காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.



ඡායාරූප - සූරියවැව නුවන් ජයසේකර
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,773 Views
17,032 Views
116 Views
1,255 Views
104 Views
45,445 Views
Top