Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%21%21
Wednesday, 12 September 2018 - 15:56
வட்ஸ் எப்பில் மாணவன் ஆசிரியைக்கு அனுப்பிய புகைப்படங்கள்..! அதிர்ச்சியடைந்த ஆசிரியை!!
4,201

Views
ஆசிரியை ஒருவரை அவரது மாணவன் ஒருவன் ஆபாசமாக படம் பிடித்து அதை அவருக்கே வட்ஸ் எப்பில் அனுப்பிய சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.

தமிழகம் - வேலூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

12 ஆம் வகுப்பில் படித்து வரும் மாணவன் அதே பாடசாலையில் பணிபுரிந்து வரும் மாலா என்ற ஆசிரியையை இவ்வாறு ஆபாசமாக படம் பிடித்துள்ளான்.

குறித்த மாணவர் அந்த ஆசிரியை காதலிப்பதாக தெரிவித்து பல மாதங்களாக தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளான்.

இந்நிலையில் , குறித்த மாணவன் அவனது கைப்பேசியில் ஆசிரியையை பல்வேறு கோணங்களில் ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளான்.

அவற்றை ஆசிரியையின் வட்ஸ் எப் இலக்கத்துக்கு அனுப்பி காதல் தொந்தரவு கொடுத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பின்னர், ஆசிரியை மாணவனை கண்டித்த போதும், அவர் இதை விடவில்லை. ஆசிரியையின், கையைப்பிடித்து இழுத்து, மாணவன் அடாவடியில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை சுவர்களில் ஆசிரியை குறித்து காதல் கவிதைகள் எழுதி வைத்துள்ளான்.

இந்நிலையில், கடந்த 6-ஆம் திகதி இரவு ஆசிரியையின் கைப்பேசிக்கு 160 தடவைக்கும் மேல் ஐ லவ் யூ டீச்சர் என்று குறுந்தகவல் அனுப்பியுள்ளான் மாணவன்.

இதற்கு மேல் பொறுமையாக இருந்தால் அவ்வளவு தான் என்று எண்ணி அவர் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளார்.

தலைமை ஆசிரியரின் சமாதானத்துக்குப் பிறகு வகுப்பு திரும்பிய மாணவன், ஆபாச படம் பார்த்து சிக்கிக் கொண்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பெற்றோர் – ஆசிரியர் கழகம், மாணவன் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,677 Views
16,785 Views
1,885 Views
1,018 Views
41 Views
45,148 Views
Top