Hirunews Logo
%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%21%21+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%21
Wednesday, 12 September 2018 - 16:18
யாரும் இல்லா நேரத்தில் காதலியின் வீட்டுக்கு சென்ற காதலன்!! பின்னர் நடந்த விபரீதம்!
3,840

Views
காதலியின் கள்ளத்தொடர்பினை தெரிந்துக்கொண்ட காதலன் அவரை கொலை செய்து பெற்றோல் ஊற்றி எரித்த சம்பவமொன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது.

சந்திமா என்ற யுவதி பதுளை அட்டாம்பிட்டி பகுதியில் வசிக்கின்றார்.

அவர் துசித்த என்ற இளைஞரை காதலிக்கின்றார்.

இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னரே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

சந்திமா காவல் துறை உத்தியோகத்திற்கு விண்ணப்பித்து காத்துக்கொண்டிருந்தார்.

துசித்த என்பவர் பெருந்தோட்டம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டு நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட வீடொன்றில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில், சந்திமாவிற்கு காவல் துறையில் இணைந்துக்கொள்தற்கான அனுமதியும் கிடைக்கப்பெறுகின்றது.

சந்திமா பயிற்சிக்கு சென்று விடுதியில் வசித்துக்கொண்டிருக்கையில் துசித்த ஒருநாள் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்துகிறார்.

சந்திமா துசித்தவுடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்கையில் பிரிதொரு கையடக்க தொலைபேசி இயங்கும் ஒலி கேட்டுள்ளது.

அந்த தருணத்தில் துசித்த சந்திமாவிடம்... யாருடைய தொலைபேசி ஒலிக்கின்றது என வினவியுள்ளார்.

நண்பி ஒருவருடையது என தெரிவித்த சந்திமா உடனே அந்த தொலைபேசியினை நிறுத்திவைத்து விட்டு கதைத்துக்கொண்டிருக்கின்றார்.

பிரிதொரு நாள் சந்திமா துசித்தவிற்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்துகின்றார்.

தான் விடுமுறையில் வீட்டுக்கு வருவதாகவும் தன்னை வந்து அழைத்து செல்லுமாறும் கோருகின்றார்.

இதன்போது துசித்தவும் சென்று சந்திமாவை அழைத்து செல்கின்றார்.

செல்லும் வழியில் சந்திமாவிற்கு தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது.

இதன்போது தன்னை வீட்டிற்கு அழைத்து சென்று விடுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க வீட்டிற்கு சென்று சந்திமாவை விட்டு வீடு திரும்பினார் துசித்த.

எனினும் துசித்தவிற்கு சந்தேகம் தோன்றியுள்ளது... சந்திமா பிரிதொரு தொலைபேசி பயன்படுத்துகின்றாரா என்று.

ஒரு நாள் சந்திமாவின் வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் சென்று ஜன்னல் வழியாக வேவு பார்த்துள்ளார்.

சந்திமா, துசித்தவிற்கு அழைப்பினை ஏற்படுத்தும் தொலைபேசியை நிறுத்தி வைத்துவிட்டு பிரிதொரு தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்கின்றார்.

இதனை பார்வையுற்ற துசித்தவிற்கு மாபெரும் அதிர்ச்சி... சந்திமா இவ்வாறு செய்வாள் என நினைக்கவில்லை.

சந்திமா கொலை செய்யும் அளவிற்கு துசித்தவிற்கு கோபம் வந்துள்ளது.

எனினும் கோபத்தினை கட்டுபடுத்திக்கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்து... தனியாக சென்று சிந்திக்கின்றார்.

இதன்போது சந்திமாவை கொன்றே ஆகவேண்டும் என்ற நோக்கத்தோடு கடைக்கு சென்று 2 லீற்றர் பெற்றோல் வாங்குகின்றார்.

மறுதினம் சந்திமா தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி தான் மாத்திரமே வீட்டில் உள்ளதாகவும் ஆகையினால் துசித்தவை வருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தனிமையில் சந்திமா இருப்பதை புரிந்து கொண்ட துசித்த கொலை செய்வதற்கு இதுவே ஏற்ற தருணம் என நினைத்து கொள்வனவு செய்த பெற்றோல் 2 லீற்றரையும் எடுத்து கொண்டு சென்கின்றார்.

சந்திமாவின் வீட்டிற்கு சென்ற துசித்த பெற்றோலை வீட்டிற்கு வெளியே மறைத்து வைத்து விட்டு சந்திமாவை சந்திக்கின்றார்.

சந்தித்த பொழுது இருவருக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்படுகின்றது.

இருவரும் முரண்பட்டு கொள்கின்றனர்... அத்துடன் துசித்த சந்திமாவை தாக்குகின்றார்.

கத்தியால் சந்திமாவின் கைகளில் காயங்களை ஏற்படுத்துகின்றார்.

மயங்கி சந்திமா கீழே விழுந்த சந்தர்ப்பத்தில் தாம் வாங்கிய பெற்றோலை அவர் மீது ஊற்றி எரியூட்டுகின்றார்.

பின்னர் துசித்த அவ்விடம் விட்டு தப்பி செல்கின்றார்.

119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்திய அயலவர்கள் முறைப்பாட்டினை தெரிவித்துள்ளனர்.

இதன்போதே சந்திமா எரிந்து கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய துசித்த கைது செய்யப்பட்டுள்ளதுடன் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
7,990 Views
20,576 Views
2,515 Views
6,432 Views
602 Views
51,794 Views
Top