Hirunews Logo
%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%9C%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88
Wednesday, 12 September 2018 - 19:12
யாழில் காவற்துறை ஜீப் வண்டி கடத்தப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணை
1,598

Views
யாழ்ப்பாணம் - கொடிகாமம் காவல்துறையினருக்கு சொந்தமாக ஜீப் வண்டி கடத்தப்பட்டமை தொடர்பில் தற்போது விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காவல்துறையினர் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்தார்.

காவல்துறையினரின் கவனயீனத்தால் இந்த சம்பவம் இடம்பெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக குறித்த வண்டி கடத்தப்பட்டதா? என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மதுபானம் அருந்திய இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்தச் சென்ற வேளையில், யாழ்ப்பாணம் - கோப்பாய் பிரதேசத்தில் வைத்து குறித்த வண்டி ஒருவரால் கடத்திச் செல்லப்பட்டது.

பின்னர் அது கைவிடப்பட்டுச் சென்றிருந்த நிலையில், சந்தேக நபரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,677 Views
16,785 Views
1,885 Views
1,018 Views
41 Views
45,148 Views
Top