Hirunews Logo
+968+%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
Wednesday, 12 September 2018 - 19:54
968 ஊழல் குற்றச்சாட்டுக்கள் பதிவு
162

Views
இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில், ஆயிரத்து 968 ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

அவற்றுள் ஆயிரத்து 264 முறைப்பாடுகள், தற்போது விசாரணைக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்தார்.

அத்துடன், மோசடி குறித்த 900 முறைப்பாடுகளும் ஊழல் தொடர்பில் 254 முறைப்பாடுகளும் தவறாக சொத்துக்களைச் சேர்த்தமை தொடர்பில் 63 முறைப்பாடுகளும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த ஆண்டின் ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 28 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதன்போது அரச அதிகாரிகள் உள்ளிட்ட 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில், விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள், அரச அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,638 Views
25,934 Views
216 Views
13,658 Views
17 Views
60,340 Views
Top