Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
Wednesday, 12 September 2018 - 20:07
கோட்டாபய ராஜபக்ஷவிடம் சுமார் மூன்றரை மணி நேரம் வாக்குமூலம் பதிவு
858

Views
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் சுமார் மூன்றரை மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு பிரிவினர் இவ்வாறு வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர்.

இன்று காலை பத்து மணியளவில் கோட்டாபய ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைத் தந்த நிலையில் பிற்பகல் 1.40 அளவில் அவர் அங்கிருந்து வெளியேறினார்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கடந்த மாதம் 17ஆம் திகதி, 2 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டிருந்தது.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடமும் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டிருந்தது.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி கடத்தப்பட்டு தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,178 Views
21,064 Views
3,083 Views
7,120 Views
806 Views
52,700 Views
Top