Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81
Wednesday, 12 September 2018 - 20:40
புதுகுடியிருப்பு வாள்வெட்டு மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் வௌியானது
1,516

Views
தனிப்பட்ட முரண்பாடு காரணமாகவே முல்லைத்தீவு புது குடியிருப்பு துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் வாள்வெட்டு மோதல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

புதுக்குடியிருப்பு காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு - கோம்பாயவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வீச்சு மற்றும் துப்பாக்கி மோதல் ஒன்றில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோம்பாவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று இரவு புகுந்து 3 பேர் கொண்ட வாள்வெட்டு குழு ஒன்று தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது.

இதன்போது வீட்டில் இருந்த ஒருவரால் குறித்த குழுவினர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த நான்கு பேரும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,292 Views
28,063 Views
546 Views
16,245 Views
269 Views
63,149 Views
Top