Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+
Friday, 14 September 2018 - 14:36
புற்றுநோயினால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை
814

Views
உலகம் முழுவதும் இந்த வருடம் 96 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் புற்றுநோயினால் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக, ஐக்கிய நாடுகளின் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், உலகம் முழுவதும் இந்த வருடம் சுமார் ஒரு கோடியே 81 லட்சம் பேருக்கு புதிதாக புற்று நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் ஆய்வு மையத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் வில்டு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதனை தடுப்பது பாரிய சவாலாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

முறையான தடுப்பு நடவடிக்கைகளை முன் கூட்டியே எடுப்பதாலும், நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெறுவதாலும் உயிர் இழப்புகளை தடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தொகை அதிகரிப்பு, வயோதிபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, சுகாதாரமற்ற வாழ்க்கை முறைமை போன்ற காரணங்களால் தான் புற்று நோயின் தாக்கம் அதிகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆண்களில் 5ல் ஒருவருக்கும், பெண்களில் 6ல் ஒருவருக்கும் வாழ்நாளில் எந்த நேரத்திலும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அத்துடன், 21ஆம் நூற்றாண்டில் புற்று நோய் காரணமாகவே, உலகத்தில் அதிக உயிர் இழப்புகள் ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,785 Views
17,145 Views
205 Views
1,328 Views
118 Views
45,536 Views
Top