Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2+%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+500+%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
Friday, 14 September 2018 - 20:29
மத்தல வனப்பகுதியில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பு சட்டவிரோதமாக அழிப்பு (காணொளி)
816

Views
வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான மத்தல கடவர வனப்பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கும் அதிகமான பிரதேசம் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் இருந்த 100 வருடங்களுக்கும் பழைமை வாய்ந்த மரங்கள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த வனப்பிரதேசம் முழுமையாக காட்டு யானைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் குறித்த பிரதேசங்களில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பு சிலரால் தீயிட்டு நாசமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆராய்வதற்காக குறித்த பகுதிக்கு வன பாதுகாப்பு அதிகாரிகள் சென்ற சந்தர்ப்பத்திலும் அங்கு சில இடங்கள் எரியூட்டப்பட்டிருந்தன. 

காட்டு யானைகள் கிராமங்களில் நுழைவதாக வனத்துறையினரை குற்றம் சுமத்துவதை விடுத்து பொதுமக்கள் வனப்பிரதேசங்களை பாதுகாக்க வேண்டும் என ஹம்பாந்தோட்டை வனவிலங்கு காரியலாயத்தின் வனப்பாதுகாப்பாளர் தெரிவித்தார்.

இவ்வாறு வனப்பிரதேசங்கள் அழிக்கப்படுவதால் தான் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,199 Views
21,134 Views
3,161 Views
7,202 Views
841 Views
52,819 Views
Top