Hirunews Logo
%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A9+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Friday, 14 September 2018 - 20:00
ரவியின் வாக்குமூலம் உண்மைக்கு புறம்பானது என நீதிமன்றில் தெரிவிப்பு
142

Views
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மத்திய வங்கியின் நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் உண்மைக்கு புறம்பான தகவல்களையே வாக்கு மூலமாக வழங்கியுள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணி லக்மினி கிரிஹாதம இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மத்திய வங்கியின் நிதி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் சத்திய பிரமாணத்துடன், உண்மைக்கு புறம்பான வாக்குமூலத்தை வழங்கியதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்காவிற்கு எதிராக குற்றபுலனாய்வு திணைக்களத்தால், வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான நீதிமன்ற விசாரணை இன்று இடம்பெற்ற போதே சட்டதரணி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்கான நீதிமன்ற ஆணையை இன்று கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க பிறப்பித்திருந்தார்.

பேப்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோஷியசுடன் தமக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆணைக்குழுவின் சாட்சியமளித்துள்ளதாகவும், அரசு தரப்பு சட்டத்தரணி சுட்டிகாட்டியுள்ளார்.

அவரால் வழங்கப்பட்ட இந்த சாட்சியமானது, முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,785 Views
17,145 Views
205 Views
1,328 Views
118 Views
45,536 Views
Top