Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF
Sunday, 16 September 2018 - 20:08
நாட்டின் விவசாயத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - ஜனாதிபதி
328

Views
நாட்டின் விவசாயத் துறையில் தற்போது தெளிவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், கடந்த கால அரசாங்கங்களினால் நிறைவேற்றப்படாதிருந்த பல செயற்பாடுகள் கடந்த மூன்று வருட காலத்தில் விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்காக தற்போதைய அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று (16) பிற்பகல் எம்பிலிட்டி மகாவலி விளையாட்டரங்கில் இடம்பெற்ற 30ஆவது மகாவலி விளையாட்டு விழாவின் நிறைவு வைபத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

பண்டைய மன்னர் காலந்தொட்டு எமது நாடு தன்னிறைவடைவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது விவசாயத்துறையே என்பதுடன், எதிர்காலத்திலும் விவசாய பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டின் உற்பத்தி செயற்பாட்டில் விசேட பங்களிப்பை செலுத்திவரும் மகாவலி விவசாய மக்களை பலப்படுத்துவதற்காக அரசாங்கம் என்ற வகையில் வழங்கக்கூடிய சகல ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, இன்று பல்வேறு துறைகளினூடாக நாட்டின் எதிர்கால பயணத்திற்கு மகாவலியினால் பெற்றுக்கொடுக்கப்படும் பங்களிப்பு பாராட்டுக்குரியதாகும் என்று தெரிவித்தார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,540 Views
25,480 Views
1,269 Views
13,177 Views
112 Views
59,824 Views
Top