Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Sunday, 16 September 2018 - 20:03
பேருந்தும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - இருவர் பலி
7,166

Views
அட்டன் – மல்லியப்பு சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையிலிருந்து கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தலவாகலையிலிருந்து அட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றும், அட்டனிலிருந்து கொட்டகலை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் சென்ற இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பில் தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,773 Views
17,032 Views
116 Views
1,255 Views
104 Views
45,445 Views
Top