Hirunews Logo
%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..
Sunday, 16 September 2018 - 20:56
எழுவர் விடுதலை தொடர்பில் சட்ட நிபுணர்களின் கருத்து..
98

Views
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக ஆளுநர் தமது முடிவை அறிவிப்பது சட்ட ரீதியாக சிக்கலானதா என்பது குறித்து சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ரொபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவிக்கக்கோரி தமிழக அரசாங்கம் ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரை முன்னதாக மத்திய அரசாங்கத்திற்கு ஆளுநரினால் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், பின்னர் அதனை ஆளுநர் மறுத்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு, சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முரண்பாடுள்ள வழக்கு.

தற்போது உயர் நீதிமன்றம் எந்தவொரு தீர்க்கமான உத்தரவையும் இதில் பிறப்பிக்கவில்லை.

அமைச்சரவையின் முடிவை வெறுமனே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எந்த கட்டாயமும் ஆளுநருக்கு கிடையாது என சட்டதரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிரேஸ்ட சட்டதரணி ஒருவர் கருத்து வெளியிடுகையில், இந்தியாவில் மாத்திரமே 20, 30 ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன என குறிப்பிட்டார்.

இந்த 7 பேரும் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்துள்ளனர்.

அவர்களை விடுதலை செய்யுமாறு மாநில அரசாங்கமும் தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி கோருகிறது.

உயர் நீதிமன்றமும் அதனை தெரிவித்துள்ளது.

ஆனால் இது சட்ட சிக்கல் வாய்ந்த வழக்கு எனக்கூறி ஆளுநர் இனியும் காலதாமதம் செய்வது என்பது ஏற்புடையதல்ல.

அதேநேரம் அவரை நிர்பந்திக்க முடியாது என கூறிவிடவும் முடியாது.

தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்.

சட்ட சிக்கல் இருந்தால் அதைத் தீர்க்க நிபுணர்கள் இருக்கிறனர் எனவும் சிரேஷ்ட சட்டதரணி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கருத்து வெளியிட்டுள்ள மேலுமொரு சட்டதரணி இந்த விடயத்தில் ஆளுநர் உடனடியாக முடிவு எடுத்துதான் ஆக வேண்டும் என்ற எந்த காலவரம்பும் கிடையாது.

அரசியலமைப்பு சட்டம் ஆளுநருக்கென தனிப்பட்ட சில அதிகாரங்களை வழங்கியுள்ளது.

அந்த அதிகாரத்தில் எவரும் தலையிட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த 7 பேரும் விடுவிக்கப்பட்டால், இலங்கையை சேர்ந்தவர்களை, மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு, இலங்கை அனுமதிக்குமா என, இந்தியாவில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வினப்பட்டுள்ளது.

இதற்கு பதில் வழங்கிய அவர், அந்த விடயம் தொடர்பில், அவர்கள் விடுவிக்கப்பட்டால் சிந்திக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,726 Views
16,970 Views
12 Views
1,179 Views
84 Views
45,338 Views
Top