Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
Sunday, 16 September 2018 - 21:01
மன்னார் மனித புதைக்குழி தடயப்பொருட்கள் உடனடியாக நீதிமன்றில்
144

Views
மன்னார் மனித புதைக்குழியில் இருந்து பெறப்படும் தடயப்பொருட்களை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மன்னார் மனித புதைக்குழி தோண்டுதல் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அந்த தோண்டுதல் பணிகளை மன்னார் நீதவான் நீதிமன்றம் மேற்பார்வை செய்து வருகின்றது.

மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் புதிய நீதவானாக டி.சரவணராஜா பொறுப்பேற்றுள்ளார்.

இந்தநிலையில், நீதவானுக்கும், களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ் சோமதேவ, சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ, காணாமல் போனார் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டதரணி சாலிய பீரிஸ் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களுக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில், அகழ்வுகளில் பெறப்படுகின்ற தடயப்பொருட்கள் தாமதமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றமை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஒரு நாளில் பெறப்படுகின்ற தடைப்பொருட்களை நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தாமதித்து நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படுகின்ற நடைமுறையொன்றே கடந்த காலங்களில் பின்பற்றப்பட்டு வந்த நிலையில், அந்த கலந்துரையாடலின் போது குறித்த தடைப்பொருட்களை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த கூட்டத்தின் போது தோண்டுதல் பணிகள் இடம்பெறும் சதொச கட்டிட வளாகத்தில் அதன்பணிகளை நிறைவுசெய்து, குறித்த நிலப்பகுதியை தங்களுக்கு விரைவாக கையளிக்குமாறு சதொச தரப்பு அதிகாரிகளால் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

அந்த கோரிக்கை தொடர்பில் ஆலோசனை நடத்திய சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சதொச கட்டிடத்தை வேறு ஒரு இடத்தில் அமைப்பதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

குறித்த பகுதியில் மேலும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படலாம் என்ற முன்னேற்பாட்டின் அடிப்படையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படும் அகழ்வுகளில் மேலும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்ற நிலையில், அகழ்வு இடம்பெறும் பிரதேசம் மேலும் விஸ்தரிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அகழ்வுகளில் மீட்கப்பட்ட உடல் பாகங்களை அமெரிக்காவின், ப்லோரிடாவிற்கு ஆய்வுகளுக்காக அனுப்புவது தொடர்பிலும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குறித்த சதொச வளாக காணி கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டதன் பின்னணி தொடர்பிலும் சில விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,217 Views
27,850 Views
15 Views
15,980 Views
223 Views
62,832 Views
Top