Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Sunday, 16 September 2018 - 21:06
போதைப்பொருள் கடத்தல்களில் சில மீனவ தரப்புக்கள் தொடர்பு
95

Views
வடக்கு, தெற்கு கடல் எல்லைப்பகுதிகளில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களில் சில மீனவ தரப்புக்கள் தொடர்பு கொண்டுள்ளதாக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் உயர் அதிகாரியொருவர் எமது செய்திச் சேவைக்கு இதனை தெரிவித்தார்.

இந்தியாவின் சில மீனவர்களுக்கும், இலங்கையில் உள்ள சில மீனவ தரப்புக்களுக்கும் இடையில் உள்ள தொடர்புகளின் அடிப்படையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெறுவதாக போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் உயர் அதிகாரி குறிப்பிட்டார்.

இந்தியாவில் இருந்து கடத்தப்படுகின்ற கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் இலங்கை கடல் எல்லைக்குள் வீசப்படுவதாகவும், இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்ற தரப்பினரால் அந்த போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் தமிழகம் புழல் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இருவர் இலங்கையிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தியுள்ளமை தொடர்பிலான தகவல்கள் கிடைத்தவுடன் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் உயர் அதிகாரி குறிப்பிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை, இந்திய சிறைச்சாலை காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனையின்போது, இலங்கையை சேர்ந்த இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து இரண்டு திறன்பேசிகள் கைப்பற்றப்பட்டிருந்தது.

அந்த திறன்பேசிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம், அவர்கள் இலங்கையிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும், ஆபிரிக்க கடத்தல்காரர்களுக்கும் தொடர்புகளை ஏறப்டுத்தியிருந்தமை கண்டறியப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

இதேவேளை, வவுனியா தொடருந்து நிலையத்தில் 19 கிலோகிராம் கேரள கஞ்சா போதைப்பொருடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்களுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பெண் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,232 Views
21,202 Views
3,239 Views
7,298 Views
872 Views
52,938 Views
Top