கோதுமை மாவின் விலையை அதிகரித்து விற்போருக்கு எச்சரிக்கை

Wednesday, 19 September 2018 - 8:57

%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வாழ்க்கைச் செலவுக் குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி 12.5 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 195 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்தமை மற்றும் இலங்கை நாணயப் பெறுமதியின் வீழ்ச்சி ஆகியவற்றால் எரிவாயுவிலையை 323 ரூபாவால் அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.

இதன் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேநேரம், பால்மாவின் விலையை குறைப்பதற்கும் வாழ்க்கைச் செலவுக் குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி 1 கிலோ எடைகொண்ட பால் மா பொதி ஒன்றின் விலை 25 ரூபாவால் குறைக்கப்படும்.

நேற்று மாலை நடைபெற்ற வாழ்க்கைச் செலவுக் குழுவின் கூட்டத்தில் வைத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேநேரம், கோதுமை மாவின் விலையை 5 ரூபாவால் அதிகரித்த உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபைத் தெரிவித்துள்ளது.

மேலும் கோதுமை மாவினை 87 ரூபா என்ற விலையை மீறி அதிக விலையில் விற்பனை செய்கின்ற சில்லறை வணிகர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips