பிரசன்ன ரணவீர மற்றும் விமல் வீரவங்சவுக்கு தடை...

Friday, 21 September 2018 - 11:50

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88...
நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணவீர மற்றும் விமல் வீரவன்ச ஆகியோருக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற ஒழுக்க விதிகளை மீறியமை தொடர்பில் குறித்த இரண்டு பேருக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான யோசனை சபை முதல்வர் லக்ஷ்மண் கிரியெல்லவினால் சபைப்படுத்தப்பட்டது.

பிரசன்ன ரணவீர தொடர்பாக இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது ஆதரவாக 41 வாக்குகளும் எதிராக 21 வாக்குகளும் பிரயோகிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் இரண்டு வாரகால நாடாளுமன்ற தடைதொடர்பான வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 39 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் பிரயோகிக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் வைத்து வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜுலை மாதம் நாடாளுமன்றில் குழப்பம் விளைவித்தமை தொடர்பில் அவர்களுக்கு எதிராக நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு விசாரணை நடத்தி இருந்தது.

அதன் பரிந்துரைக்கு அமைய இருவருக்கும் இந்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips