இரத்தினபுரியில் வீடொன்றை தீயிட்டு கொழுத்திய போதைப்பொருள் மோசடியாளர்கள்

Friday, 21 September 2018 - 20:49

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இரத்தினபுரி, ஓப்பநாயக்க, ஹுனுவெல, ஹல்லின்ன பிரிவில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுகின்ற சிலரால் வீடொன்று தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.

வீட்டுக்கு தீவைக்கப்பட்டு 3 தினங்களாகியும் காவல்துறை தரப்பில் இருந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லையென பாதிக்கப்பட்ட குடும்பத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த புதன்கிழமை குறித்த வீட்டின் உரிமையாளருக்கும், போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக பொதுமக்களால் குற்றம் சுமத்தப்படும் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்படும் ஒருவர் காயமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் தீயிட்டு எறிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையிலேயே, அவரது வீடு தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.

வீடு எரிக்கப்பட்ட விடயம் தொடர்பாக சூரியன் செய்திப் பிரிவு ஓப்பநாயக்க காவல்நிலைய பொறுப்பதிகாரியை தொடர்புகொண்டு வினவியிருந்தது.

இது குறித்து விளக்கமளித்த காவல் நிலைய பொறுப்பதிகாரி, வீட்டுக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும், சந்தேகநபர்கள் அடையாளப்படுத்தப்படும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.

இதேவேளை, வீட்டை தீயிட்டு கொளுத்தியதாக சந்தேகிக்கப்படும் தரப்பினர், தோட்டப்பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், இதன் காரணமாக தோட்ட மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுப்பதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இது தொடர்பில் விளக்கமளித்த காவல்நிலைய பொறுப்பதிகாரி, குறித்த பகுதியில் பாரிய அளவிலான போதைப்பொருள் வியாபாரங்கள் இடம்பெறுவதில்லையென தெரிவித்தார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips