இனிமேல் இது கட்டாயம்...!!

Sunday, 23 September 2018 - 7:42

%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D...%21%21
முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் அறவீட்டு கட்டணக் கருவியை கட்டாயமாக்கும் திட்டத்தை அடுத்த மாதம் நடுப்பகுதியளவில் நடைமுறைப்படுத்துவதாக பெருந்தெருக்கள் பாதுகாப்பு தொடர்பாக தேசிய சபை தெரிவித்துள்ளது.
 
முச்சக்கர வண்டிகளில் மீற்றர் அளவீட்டுக் கருவியை பொறுத்துவதற்கான காலம் தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
 
இந்த நிலையிலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
 
முச்சக்கர வண்டியில் பயணிக்கும் பயணிகளிடம் நியாயமான கட்டண அறிவீடு மேற்கொள்ள வேண்டும்.

எனவேதான், மீற்றர் அளவீட்டுக் கருவியை பொறுத்துவது கட்டாயமாக்கப்பட்டது.
 
எனினும், முச்சக்கர வண்டிச் சாரதிகள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, அதற்காக வழங்கப்பட்ட ஒன்றரை வருடகால அவகாசம் தற்போது நிறைவடைந்துள்ளதாக பெருந்தெருக்கள் பாதுகாப்பு தொடர்பாக தேசிய சபையின் தலைவர் கூறியுள்ளார்.
 
இந்த நிலையில், முச்சக்கர வண்டிச் சாரதிகள், மீற்றர் அளவீட்டுக் கருவி இன்றி பயணிகளை ஏற்றிச் செல்வார்களாயின் அவர்களை நீதிமன்றிற்கு கொண்டு செல்ல காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்க போக்குவரத்து அமைச்சர் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips