ஜெனிவா பயணமானார் எஸ்.ஸ்ரீதரன்

Tuesday, 25 September 2018 - 8:21

%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமர்வுகளில் பங்கேற்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் ஜெனிவா பயணமாகியுள்ளார்.

நேற்றிரவு அவர் நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

தாம் தனிப்பட்ட முறையிலேயே ஜெனிவா பயணமாவதாகவும், கூட்டமைப்பிற்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் அவர், விமான நிலையத்தில் இருந்து புறப்படும் முன்னர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜெனிவா செல்வது தொடர்பில் விரைவில் தீர்மானிக்கும் என முன்னர் அறிவித்திருந்தது.

எனினும் இது வரையில் அது தொடர்பில் எந்த அறிவிப்பையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips