Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+5+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21%21
Thursday, 11 October 2018 - 10:48
கிணற்றில் இருந்து 5 குழந்தைகளின் சடலங்கள் மீட்பு - அதிர்ச்சியில் பிரதேசவாசிகள்!!
12,020

Views
கிணற்றொன்றில் இருந்து 5 குழந்தைகளின் சடலங்கள் காவற்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம்  பர்வானி மாவட்டத்தில் இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று இந்த சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

3 முதல் 7 வயதுக்கிடைப்பட்ட குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும் ,குழந்தைகளின் பெற்றோர் மாயமாகியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பட்டார் சிங் என்பவரின் பிள்ளைகளே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

40 வயதுடைய பட்டார் சிங்கிற்கு இரண்டு மனைவிகள் .

முதல் மனைவிக்கு 4 குழந்தைகளும் , இரண்டாவது மனைவிக்கு ஒரு குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் , குறித்த 5 குழந்தைகளும் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், பட்டார் சிங் மற்றும் அவரது முதல் மனைவி மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரின் இரண்டாவது மனைவி தனது ஒரே பிள்ளையை இழந்த நிலையில் பேச்சுமூச்சின்றி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

காணாமல் போயுள்ள தம்பதியினை தேடி காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும் , காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என காவற்துறையினர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,230 Views
18,732 Views
347 Views
3,344 Views
95 Views
47,921 Views
Top